தூரம் காண்போம்!

IMG_20151104_124303172_HDR

நில வரைபடத்தைக்கொண்டு ஊர்களுக்கிடையேயான தூரத்தை தெரிந்துகொள்ளச்செய்யலாம்.

இந்திய வரைபடத்தைக்கொடுத்து சென்னைக்கும் மும்பைக்கும் இடையே வரை படத்தில் உள்ள தூரத்தை அளவுகோலால் அளந்து செண்டிமீட்டரில் எழுதிக்கொள்ள வேண்டும் வரைபடத்தில் உள்ள அளவு திட்ட்த்தில் ஒரு செண்டிமீட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் என குறிப்பிடப்பட்டிருக்கும். அதைக்கொண்டு இரண்டு ஊர்களுக்கு இடையே உள்ள உண்மையான தொலைவைக்கண்டறியலாம்.

 

 

மாதிரி கணக்கு: படத்தின் அளவுத்திட்டம் 1 செ.மீ. = 43கி.மீ.

சென்னை மும்பை இடையே வரைபடத்தில் உள்ள தொலைவு = 23 செ.மீ.

சென்னை மும்பை இடையே உண்மையான தொலைவு = 23 X 43 = 989 கிமீ

இதுபோல் வெவ்வேறு நகரங்களுக்கு இடைப்பட்ட தூரத்தை அளந்து உண்மையான தொலைவைக் கணக்கிடச்செய்து மதிப்பிடலாம்.

 

 

6ஆம் வகுப்பு, கணக்கு, அன்றாட கணிதம்

இரத்தின புகழேந்தி,அரசு உயர்நிலைப்பள்ளி ,மன்னம்பாடி

10 ஆம் வகுப்பு மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு

10 ஆம் வகுப்பில் கணக்கு பாடத்தில் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான ஆலோசனை (மதிப்பெண்கள் அடிப்படையில்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

Maths

வரைபடம் அறிவோமா?

IMG_20151102_140454663

தரையில் சில  பொருள்களை வைத்து அந்த பொருள்கள் அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடும்படி மாணவர்களிடம் கேட்டால் அவர்களால் குறிப்பிட முடியாது. அவர்களுக்கு உதவுவதற்காக பிரெஞ்சு கணித மேதை ரெனோ கார்டஸ் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக்கூறி வழிகாட்டலாம். அவர் சிறுவனாக இருந்த போது படுக்கையில் படுத்திருக்கிறார் மேற்கூரைப் பகுதியில் ஒரு பூச்சி அங்கும் இங்கும் மாறி மாறி அமர்கிறது. பூச்சியின் அமைவிட்த்தைக் கண்டுபிடிப்பதற்காக அவருக்குத்தோன்றியதுதான் இன்றைய வரைபடம். ஒரு பொருளின் அமைவிட்த்தை எளிதாக்க் கண்டறிய சம இடைவெளிகளில் குறுக்கு நெடுக்குக் கோடுகள் அமைத்து வரைபடம் வரையலாம்.

அதுபோல் தரையில் வரைபட்த்தாளில் உள்ளதுபோல் கட்டங்களை வரந்து கோடுகளுக்கு என்கள் கொடுத்து மாணவர்களிடம் உள்ள பொருள்களை கோடுகள் வெட்டிக்கொள்ளும் இடங்களில் வைத்து இப்போது பொருள் அமைந்துள்ள இடத்தினை கோடுகளின் எண்களைக்குறிப்பிட்டு சொல்லும்படி செய்யலாம்.

எடுத்துக்காட்டாக தண்ணீர் பாட்டில் எங்கு உள்ளது எனக்கேட்டால் (2,2) என்ற புள்ளியில் உள்ளது எனக்கூறுவர்.அதுபோல் ஒரு புள்ளியைக்குறிப்பிட்டு அந்த புள்ளியில் டம்ளரை வை என்று கூறலாம்.

இப்படி பல வழிகளில் கிராஃப் என்னும் வரைபடத்திறனை வளர்க்கலாம்.