10th maths புள்ளியியலும் நிகழ்தகவும்

ஒரு மதிப்பெண் தேர்வு

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScDN0eIyzRd6TsSE4_XzmIFMSWsgSKkwh7fBn4Z73UaHC5AoA/viewform

விளையாட்டாய் சராசரி அறிவோம்

avarage avarage1
  ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் உள்ளனர் எனில் 200 சிறு துண்டு அட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களை 5 குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். ஒரு குழுவுக்கு 40 அட்டைகள் வீதம் கொ டுக்கவும். முதல் குழு அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அட்டைகளில் A என்ற எழுத்தை எழுத வேண்டும். இவ்வாறு மற்ற குழுக்கள் முறையே B,C,D,E  ஆகிய எழுத்துகளை அவரவர்களுக்கு வழங்கப்பட்ட அட்டைகளில் எழுத வேண்டும். எழுதப்பட்ட அனைத்து அட்டைகளையும் ஒரு பெட்டியில் சேகரித்து நன்றாக குலுக்க வேண்டும்.
இப்போது பெட்டியிலுள்ள  துண்டு அட்டைகளிலிருந்து ஒவ்வொரு மாணவரையும் 10 அட்டைகள் வீதம் எடுக்கச்சொல்க.
ஆசிரியர் கரும்பலகையில் A=5,  B=4,C=3,D=2,E=1 என  எழுதி ஒவ்வொரு எழுத்திற்கும் எண்மதிப்பைக்கொடுக்கவேண்டும்.
இப்போது மாணவர்கள்  அவரவர் எடுத்துள்ள எழுத்துகளுக்கு ஏற்ற எண் மதிப்பை எழுதி அந்த எண்களுக்கான சராசரியைக் கண்டறிய வேண்டும் யாருடைய சராசரி அதிகமாக வந்துள்ளதோ அவருக்கு அனைவரும் கைத்தட்டி பாராட்டைத்தெரிவிக்க வேண்டும்.
இப்படிச் சொல்வதால் மாணவர்கள் ஆர்வமாக போட்டி போட்டுக்கொண்டு சராசரியைக் கண்டுபிடிப்பார்கள். கரவொலிபெறும் அதிர்ஷ்டசாலி யாராக இருக்குமோ என மாணவர்கள் ஆர்வமாக இக்கணக்கைச் செய்வதோடு விரைவாகவும் செய்து முடிப்பார்கள். இச்செயல்பாட்டின்மூலம் மாணவர்கள் விளையாட்டு முறையில் சராசரியைக்கற்பதோடு மகிழ்வாகவும் கற்றுக்கொள்வார்கள்.