கணிதவியலாளர்கள்

george boole

1.ஜார்ஜ் பூல்:

ஜார்ஜ் பூல் இங்கிலாந்தில் பிறந்த ஒரு கணிதவியலாளர் மற்றும் தத்துவவியலாளர் ஆவார். இவர் 1815 நவம்பர் 2 ஆம் தேதி பிறந்தார்.
இவரே இன்றைய கணினி அறிவியலில் பயன்படுத்தப் படுத்தப்பட்டு வரும் பூலியன் கணிதத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார். . பூலியன் தர்க்கம் தான் இன்று கணினிகள் , தேடு பொறிகள் இயங்குவதற்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. இந்த சிந்தனையின் சொந்தக்காரர் ஜார்ஜ் பூல். இவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக முக்கியமான கணித மேதை.  இவர் கணினி அறிவியல் துறையைத் தோன்றக் காரணமானவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

தருக்க ரீதியான விவாதங்களைக்குறிக்கும் குறியீடுகள் மற்றும் இயற்கணிதக்குறியீடுகளுக்கிடையே நெருங்கிய ஒற்றுமை உண்டு என்று நம்பியவர்.

2.ஜார்ஜ் கேண்டர்

george cantorஜ்

ஜார்ஜ் கேண்டர் ஜெர்மன் நாட்டு கணித அறிஞர்.கணவியலின் அடிப்படைக்கருத்துக்களை இவர் உருவாக்கினார்.பிற்கால கணவியல் வளர்ச்சிக்கு இவரின் ஆய்வு அடிப்படையாக அமைந்தது.

3.ராமானுஜம்

ramanujam

ராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்! அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம்! “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.
பன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney’s Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.
பதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது. அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.
1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.
கணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.

 4.அல் கரிஷ்மி 

algarishmi

சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்டு கணித துறையில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியவர், உலகின் மிகச்சிறந்த கணிதமேதைகளில் ஒருவர் என்று புகழப்படும் அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்ன் மூஸா அல் கரிஷ்மி (Abu Abdullah Muhammed ibn Musa al Khwarizmi, 780-850) அவர்கள். அல்ஜீப்ராவை (Algebra) கண்டுபிடித்ததும் இவரே.
இவர் படம் பொறித்த தபால் தலையை சோவியத் ரஷ்யா 1983 ஆம் ஆண்டு வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தது.

இவர் அறிவியலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியிருக்கிறார். இங்கு நாம் கணித துறையை மட்டும் பார்ப்போம். இவர் ஹிந்துக்களின் எண்களை எடுத்து அதில் சிபரை சேர்த்து கணிதத்துறையை மற்றுமொரு பரிமாணத்திற்கு எடுத்துச்சென்றார். இவருடைய நூல்களில் இந்த எண்களை பயன்படுத்தி கூட்டல் மற்றும் கழித்தல் போன்றவற்றை மிக எளிதாக, நேர்த்தியாக விளக்கி காட்டினார். இவருடைய இந்த பங்களிப்பே இன்றைய எண்கணித முறைக்கு முன்னோடி.

தசம கணித (Decimal Fractions) முறையை கண்டுபிடித்தது அல்-கசி (Al-Kashi) அவர்கள், பதினைந்தாம் நூற்ற்றாண்டின் முற்பகுதியில் கண்டுபிடித்தார். கணிதத்தில் இவருடைய பணி மிகச்சிறந்தது.

 

5.லியொனார்டோ பிசானோ( ஃபிபொனாச்சி)

fibanachi

 

லியொனார்டோ இத்தாலியில் உள்ள பீசா நகரில் 1170 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை குக்லியெல்மோ, எளிமையான அல்லது நல்லியல்புள்ள என்னும் பொருள்கொண்ட “பொனாச்சியோ” என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுவந்தார். லியொனார்டோவுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போதே இவரது தாய் அலெசாந்திரா இறந்துவிட்டார். லியொனார்டோ இறந்த பின்பே இவரை ஃபிபிபொனாச்சி என அழைத்தனர். இது, பொனாச்சியோவின் மகன் எனப் பொருள் தரும் ஃபிலியஸ் பொனாச்சி என்பதன் சுருக்கம் ஆகும்.

பிபொனாச்சி (Fibonacci – கிபி 1170 – 1250) ஒரு இத்தாலியக் கணிதவியலாளர். இக் கணிதவியலர் பல பெயர்களாலும் அறியப்படுகின்றார். பீசாவின் லியொனார்டோ, லியொனார்டோ பிசானோ, லியொனார்டோ பொனாச்சி, லியொனார்டோ ஃபிபொனாச்சி போன்ற பல பெயர்களாலும் அறியப்பட்டார். இடைக் காலத்தின் மிகத் திறமை வாய்ந்த கணிதவியலாளர் என இவர் கருதப்படுவதும் உண்டு.

பின்வருவனவற்றுக்காக இவர் தற்கால உலகில் அறியப்படுகிறார்:

இந்து-அரபிக் எண்முறையை ஐரோப்பாவில் அறிமுகப் படுத்தினார். 13 ஆவது நூற்றாண்டில் இவரெழுதி வெளியிட்ட கணிப்பு நூல் என்னும் பொருள் கொண்ட லிபெர் அபாச்சி (Liber Abaci) என்னும் நூலில் இக்கருத்துகள் பதிவாயின.
ஃபிபோனாச்சி எண்கள் எனப்படும் எண் வரிசையை இவர் கண்டு பிடிக்கவில்லை. எனினும் தனது நூலில் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியுள்ளார். இதனால் இவ்வெண்ணுக்கு இவரது பெயரைத்தழுவிப் பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *