இணைகரத்தின் பண்புகள் அறிவோம்

Parlogram
வடிவியல் என்பது நுட்பமான பாடம். இதனை மாணவர்களுக்கு செயல் வழியில் கற்பிப்பது அவசியம். நிலங்களை அளவெடுப்பதற்கும் கட்டுமானப்பணிகளில் கட்டடங்களை வடிவமைப்பதற்கும் வடிவியல் கருத்துகள் பயன்படுகின்றன. வடிவியலில் இணைகரம் பற்றிய பண்புகள் 9 ஆம் வகுப்பில் பாடமாக அமைந்துள்ளது. இணைகரம் என்பது எதிரெதிர் பக்கங்கள் இணையாக அமைந்த வடிவம்.
இணைகரத்தின் பண்புகளை  வடிவியலில் பக்கம், கோணம், மூலை விட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் விளக்குகின்றனர்.
1.இணைகரத்தின் எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் அமைந்திருக்கும்.
2.எதிர்க்கோணங்கள் சமமாகவும், அடுத்துள்ள கோணங்கள் மிகைநிரப்புக் கோணங்களாகவும் அமைந்திருக்கும்.
3.இணைகரத்தின் மூலை விட்டங்கள் ஒன்றையொன்று இருசமக்கூறிடும். மேலும் இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒவ்வொன்றும் இணைகரத்தை இரண்டு சர்வ சம முக்கோணங்களாகப் பிரிக்கும்.
என்பன இணைகரத்தின் பண்புகளாகும். இவற்றை பல்வேறு கணக்குகள் மூலம் மாணவர்களுக்கு விளக்கலாம். இருப்பினும் செயல்பாடுகள் மூலம் இவற்றை விளக்கினால் மாணவர்கள் மனத்தில் நன்கு பதியும். அவர்களின் செயல்பாட்டின் தன்மைக்கேற்ப மதிப்பிடலாம்.
படத்தில் உள்ளபடி மாணவர்களிடம் இணைகர வடிவ அட்டைகளைக் கொடுத்துவிடவும். இணைகரத்தின் இரண்டு மூலை விட்டங்கள் வழியே நான்கு முக்கோணங்களாக வெட்டி எடுத்தபின்  கிடைத்த நான்கு முக்கோணங்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து பொருத்திப்பார்த்து சர்வ சம முக்கோணங்கள் கிடைத்துள்ளதை மாணவர்கள் தாமாகவே உணர்ச் செய்தல் வேண்டும்.
நாம் எதிர்பார்த்தபடி பதிலளிக்கும் மாண்வர்களுக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.
9ஆம் வகுப்பு, கணக்கு, வடிவியல் பாடத்திற்கான செயல்பாடு.