என்னைப்பற்றி

இரத்தின புகழேந்தி

கணக்கு ஆசிரியர்

அரசு உயர்நிலைப்பள்ளி

மன்னம்பாடி

கடலூர் மாவட்டம்

இரத்தின.புகழேந்தி சில குறிப்புகள்

பெற்ற பரிசுகள் பாராட்டுகள்:

1. நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர் விருது(ரூ.5000/- பரிசும் பாராட்டு இதழும்)

2. கடலூர் மாவட்ட அரிமாசங்கம் 2014 ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான மாவட்ட விருது.( பதக்கமும் பாராட்டு இதழும்)

3.விருத்தாசலம் சுழற்சங்கம் 2015 ஆம் ஆண்டு சிறந்த படைப்பாளி விருது.

4. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் உலகத்தமிழ்ச்சங்கமும் இணைந்து மதுரையில் நடத்திய முதலாவது உலகத்தமிழிசை மாநாட்டில் “ உலகத் தமிழிசைத் தூதுவர் விருது 2019 இல் குன்றகுடி பொன்னம்பல அடிகளாரால் வழங்கப்பட்டது.

5. இந்து தமிழ் திசை நாளிதழும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து வழங்கிய முன்னோடி அன்பாசிரியர் விருது 2020 இல் கல்வி அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்களால் வழங்கப்பட்டது.

21 23 24 

பெயர்                                      : இரத்தின. புகழேந்தி

பிறந்த ஊர்                              : மருங்கூர், விருத்தாசலம்- வட்டம், கடலூர்- மாவட்டம்.

பிறந்த ஆண்டு                        : 1967

பெற்றோர்                               : இரத்தினசபாபதி- இராசலட்சுமி

கல்வி                                       : எம்.ஏ., எம்.எட்., பிஎச்.டி.,

பணி                                        : ஆசிரியர்

பணியாற்றும் பள்ளி             : அரசு உயர் நிலைப் பள்ளி

மன்னம்பாடி – 606 302.

வெளியிட்டுள்ள நூல்கள்    :

1. மண்கவுச்சி                                                     களம்,மருங்கூர்.                                   1994

2. வன்னியசாதிப்பிள்ளைகள்                அண்ணல்வெளியீடு,சென்னை                      2001

3. தமிழக நாட்டுப்புறமக்களின்

உணவுமுறைகளும் பழக்க வழக்கங்களும்    ஸ்னேகா,சென்னை                           2004

4. நகர்க்குருவி                                       மருதா,சென்னை                                            2005

5. மரபுவழி அறிவுமுறை                                    மருதா,சென்னை                               2006

6. கிராமத்து விளையாட்டுகள்                       விகடன் பிரசுரம்,சென்னை                              2008

7.ரதி மன்மதன் கதைப்பாடல்கள் 2014 ஊருணி வாசகர் வட்டம்,சென்னை

8. கலை விளையும் நிலம் 2015 நிவேதிதா பதிப்பகம் ,சென்னை

 

மேற்கண்ட நூல்கள் பற்றிய திறனாய்வு வெளியான இதழ்கள்:

இந்தியாடுடே, குமுதம், கணையாழி, சிறுகதைக் கதிர், அறங்கேற்றம், நிறப்பிரிகை, அம்ருதா, தினத்தந்தி, தினமலர்.

இதழியல் பட்டறிவு:

                    இதழ்                              பொறுப்பு

களம் புதிது                              இணையாசிரியர்

நடவு                                        ஆசிரியர் குழு உறுப்பினர்

தளிர்                                        ஆசிரியர்

கருப்புச்சொற்கள்                    ஆசிரியர் குழு உறுப்பினர்

வையம்                                    ஆசிரியர் குழு உறுப்பினர்

படைப்புகள் வெளியான இதழ்கள்:

ஆனந்தவிகடன் தீபாவளி மலர் – 2009, அவள் விகடன், குமுதம், குமுதம் தீராநதி, புதிய பார்வை, கணையாழி, படித்துறை, காளான், தை, களம் புதிது, மணிமுத்தாறு, சதுக்கப்பூதம், சுற்றுச்சூழல், தினமணி, தமிழ்ஓசை.

பேட்டி வெளியான இதழ்கள் :

குங்குமம், தமிழன்எக்ஸ்பிரஸ், ஜூனியர் விகடன், அவள் விகடன்.

கட்டுரைகள் வெளியான தொகுப்பு நூல்கள் :

ஆய்வுக்கோவை, மண்வாசம், வாழும் மரபுகள், மாறிவரும் சமூகம், தமிழகத்தில் நாடோடிகள், சிறுவர் சிறுமியர் வழக்காறுகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவச் சிந்தனைகள்.

இணைய வழி கலை இலக்கியப் பணிகள்:

•           வலைப்பூ -1 – – http://rathinapughazhendi.blogspot.com  கதை, கவிதை, கட்டுரை,                                             கலை  இலக்கியத் திறனாய்வு, படைப்பாளர் அறிமுகம், இலக்கிய                                                  நிகழ்வு, கருத்தரங்கு ஆகிய பதிவுகள்.

•           வலைப்பூ – 2- – http://mankavuchi.blogspot.com  மண்சார்ந்த பதிவுகள்.

•           வலைப்பூ – 3 – (http://rathinapugazhendi.blogspot.com  நாட்டுப்புறம் ) நாட்டுப்புறப்                                          பாடல்களுக்கான வலைப்பூ

வலைப்பூ தோற்றங்கள்

மண்கவுச்சி

நாட்டுப்புறம்

இரத்தின புகழேந்தி

இலக்கிய அமைப்புகளோடு இணைந்து ஆற்றிய பணிகள்:

1991 ஆம் ஆண்டிலிருந்து களம், மணிமுத்தாறு,விளிம்பு நிலை மக்கள் கலை இலக்கிய இயக்கம், தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்,  திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு போன்ற பல்வேறு கலை இலக்கிய இயக்கங்களோடு இணைந்து கலை இலக்கியக் கருத்தரங்குகள், மாநாடுகள்,  திறனாய்வு அமர்வுகள், ஓவியப் பயிலரங்குகள் ஆகிய நிகழவுகளை ஒருங்கிணைத்து நடத்திய பட்டறிவு உண்டு.

பெற்றுள்ள பயிற்சிகள் :

கல்விக்கான பொம்மலாட்டப் பயிற்சி – மத்திய அரசின் பண்பாட்டு வளங்களுக்கான பயிற்சி மையம், புதுடெல்லி – 1993.

வாய்மொழியியலும் எழுத்தியலும் செயலரங்கு, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை – 1998

நாட்டுப்புறவியல் செயலரங்க வரிசை – தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம், திருவனந்தபுரம். (மூன்று நிலைகள்)

நிலை – 1 : தஞ்சாவூர் – 2001,

நிலை – 2 : காந்திகிராமம் – 2001,

நிலை – 3 : கோத்தகிரி – 2002.

கணினி பயிற்சி – மைக்ரோ சாப்ட் நிறுவனம் – 2006

 

பங்கேற்ற கருத்தரங்குகள் :

உலகத் தமிழ் ஆசிரியர் 4 ஆவது மாநாடு,  சென்னை – 1998.

உலகக் கதைத் திருவிழா,  புதுடெல்லி – 2004.

உலகத் தமிழ் ஆசிரியர் 8 ஆவது மாநாடு, சென்னை – 2008.

தேசிய நாட்டுப்புறவியல் கருத்தரங்கு, காகதிய பல்கலைக்கழகம்,

வாரங்கல்,ஆந்திரா,2001

தேசிய நாட்டுப்புறவியல் கருத்தரங்கு, திராவிட பல்கலைக்கழகம், குப்பம்,

ஆந்திரா – 2010

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் நிதியுதவியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கு,              பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 2010

தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும் தேசிய கருத்தரங்கு,                                 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை – 2010.

இன்றைய வாழ்க்கையில் இலக்கியம் – பன்னாட்டுக் கருத்தரங்கம், டிண்டேல் கல்லூரி                 சிங்கப்பூர் _ 2010.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு , கோவை – 2010.

அயல் நாட்டு தமிழ் இலக்கியங்கள் , உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை , 2013

 

ஆனந்த விகடன் அறம் செய விரும்பு திட்டத்தில் தன்னார்வலர்

IMG-20151022-WA0005

சென்று வந்த அயல் நாடுகள்

          சிங்கப்பூர்

          மலேசியா

 

முகவரி : 18, தங்கம் நகர்,   பூதாமூர், விருத்தாசலம் – 606 001,  கடலூர் – மாவட்டம்.

மின்னஞ்சல் : pugazhvdm@gmail.com

பேசி : 9944852295

இரத்தினபுகழேந்தியின் நூல்கள்

1) மண்கவுச்சி : கதை,கவிதை,நாட்டுப்புற பாடல்கள் அடங்கிய நவீன தொகுப்பு. களம் வெளியீடு, மருங்கூர்,விருத்தாசலம் வட்டம்,கடலூர் மாவட்டம்-608 703. முதல் பதிப்பு 1994

விலை ரூ 15.

நூலைப்பற்றி: செவ்வியல் இலக்கியங்களுக்கெல்லாம் தாயாக விழங்குவது நாட்டுப்புற இலக்கியமே. நவீன படைப்பாளிகளின் புனைவுகளுக்கு சற்றும் குறையாத இலக்கிய வளம் வாய்மொழி இலக்கியப் படைப்புகளிலும் உண்டு என்பதை நமக்கு உணர்த்துகிறது இந் நூல். மண்ணிலிருந்து வருவது வாசமல்ல கவுச்சிதான் என்பதை நமக்கு அழுத்தம் திருத்தமாக இதிலுள்ள மக்கள் படைப்புகள் எடுத்துரைக்கின்றன.

2) வன்னிய சாதிப்பிள்ளைகள் : நாட்டுப்புறவியல் ஆய்வுக்கட்டுரைகள், அண்ணல்வெளியீடு, 4,கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 097, பேச: 044-232840, முதல்பதிப்பு 2001. ISBN : 81-87962-08-9    விலை ரூ 50.

நூலைப்பற்றி: கலை, வழிபாடு, பழக்கவழக்கங்கள், தொழில்நுட்பங்கள், கோட்பாட்டாய்வுகள் என்னும் பெருந்தலைப்புகளில் பதினேழு ஆய்வுக்கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மக்கள் வழக்காறுகளை மக்களிடமிருந்து சேகரித்து மிக நுணுக்கமாக இவர் ஆராய்ந்து கருத்துகளை வெளியிட்டுள்ளார். உணவு பற்றிய இவருடைய கட்டுரைகளும், தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகளும், நிலப்பெயராய்வு, சாதிப்பிள்ளைகளின் வாய் மொழி வரலாறு முதலான கட்டுரைகளும் நாட்டுப்புறவியல் துறைக்கு முற்றிலும் புதியவை. சமூக மேம்பிட்டிற்குத் துணை நிற்பவை – முனைவர் ஆறு.இராமநாதன்.

3) தமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும் –

வெளியீடு: ஸ்நேகா பதிப்பகம்,348, டி.டி.கே.சாலை, இராயப்பேட்டை, சென்னை -600 014, முதல் பதிப்பு :2004    ISBN :81-87371-45-5    விலை ரூ 60.

நூலைப்பற்றி: விளிம்பு நிலை மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களுக்குப் பின்னணியில் இருக்கும் இனக்குழு மனோபாவங்கள், பண்பாட்டுக் கூறுகள், மருத்துவப் பயன்கள் ஆகியவற்றை கள ஆய்வுகளின் சான்றாதாரங்களுடன் விளக்கும் இந்நூல் நாட்டுப்புறவியல் துறைக்கு வளமும் வலிமையும் சேர்க்கக்கூடியது. நவீனமயமாக்கலின் இருண்ட விளைவுகளான உடனடி உணவகங்கள் மூன்றாம் உலக மனிதர்களின் ஆரோக்கியத்தை, கலாச்சாரத்தை, பொருளாதாரத்தைச் சுரண்டும் நிலையில் நம்முடைய மரபுவழியான உணவு, மருத்துவ முறைகள் மாற்று முறைகளாகக் கருதப்படும் அவலச்சூழல் நிலவுகிறது. இந்நிலையயில் ஒரு தொன்மை நாகரிகமே நாட்டுப்புறவியலாய் வடிவம் கொண்டிருப்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது.

4) நகர்க் குருவி : நவீன கவிதைகள், வெளியீடு: மருதா பதிப்பகம், 226, பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை -600 014. முதல் பதிப்பு: 2005 , விலை ரூ 60.

நூலைப்பற்றி: இனக்குழு வாழ்வின் தொன்ம நினைவடுக்குகளை மீட்டு வரும் இக்கவிதைகள் நவீன வாழ்வில் நாம் இழந்தவற்றை ஞாபகமூட்டி துயர்கவியச் செய்பவை. உள்ளீடற்று வெறும் தொழில் நுட்பத்தைக் கவிதையென நம்பும் போலிச்சூழலிலிருந்து விலகி மனிதனுக்கும்- மனிதனுக்கும் , மனிதனுக்கும்- பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவை எளிய நடையில் ஈர்ப்பு மிக்கச் சொற்களில் மொழிகின்றன இக்கவிதைகள்.

5) மரபுவழி அறிவுமுறை: நாட்டுப்புற ஆய்வுக்கட்டுரைகள் , வெளியீடு : மருதாபதிப்பகம்,  முதல் பதிப்பு 2006, விலை ரூ. 60

நூலைப்பற்றி: தொன்மத்தின் கொடையும் மரபின் செழுமையும் நவீன வாழ்க்கைக்கு வளம் சேர்க்கக்கூடியவைதான் எனும் நம்பிக்கையை மறு உறுதி செய்கிறது இந்நூல். நீள் பழமையும் நாகரிகத் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் இனக்குழு சமூகங்களின் அறிதல் முறை அறிவியல் பண்பும் தருக்கத் தொடர்பும் உடையவை. உணவு, மருத்துவம், விளையாட்டு, பாலியல் குறித்த இம்மரபுவழி அறிவு நம்முடைய பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. நவீன மயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற ஏகாதிபத்திய போக்குகள் நம் மரபு வழி அறிவைக் குலைத்து பண்பாட்டு அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கும் சூழலில் நிலவும் மந்தகதியைக் கலைத்து சுய விழிப்பைத் தூண்டுவதாய் அமைந்திருக்கிறது இந்நூல்.

6) கிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, விலை ரூ. 55.

ISBN: 978-81-8476-126-9.

நூலைப்பற்றி: விளையாட்டு ஒரு சமூகத்தின் தொன்மையை, பண்பாட்டு மூலங்களை தன்னுள் சேகரித்து வைத்திருக்கிறது. எல்லா துறைகளிலும் நம் பண்பாட்டு அடையாளங்களை இழந்து வரும் இன்றைய சூழலில் நம் தமிழ்க்குழந்தைகள் இழந்து வரும் மரபு வழி விளையாட்டுகளை கவனப் படுத்துகிறது இந்நூல். நம் மரபு வழி விளையாட்டுகள் தோழமை உணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தலைமைப்பண்பு, அச்சமின்மை, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறன், சமயோசித அறிவு போன்ற அற மதிப்புகளை உருவாக்குபவை என்பதை இந்நூலைப் படித்து முடிக்கையில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

7) ரதி மன்மதன் கதைப்பாடல்கள்: 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஓலைச்சுவடியின் பதிப்பு.

வெளியீடு: ஊருணி வாசகர் வட்டம் 22/105, பாஸ்கர் காலனி, 3 ஆவது தெரு, விருகம்பாக்கம்,சென்னை 600092

அரசுபள்ளிஆசிரியர்.

கவிதை, கதை,

கட்டுரை, இலக்கிய

திறனாய்வுகள்

எழுதுபவர்.

ஏழு நூல்கள்

வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் இரத்தின புகழேந்தி படைப்புகள்                

 

 

 

 

 

  • https://bit.ly/2uxLdTh (தமிழ் இந்து கலை விளையும் நிலம் நூல் விமர்சனம் 1.07.2015)
  • https://bit.ly/2zQu508 (அஞ்சலி : தமிழ்நாடன் ,தமிழ் இந்து 10.11.2013)
  • https://bit.ly/2Nt4exp (தெருக்கூத்து கட்டுரை, தமிழ் இந்து,01.10.2013)

 

(மண்கவுச்சி நூல் அறிமுகம் கவிஞர் ராணிதிலக் 3.3.2013)

 

 

இரத்தின புகழேந்தி நூல்களை இணையத்தில் பெற

 

 

25.வலைப்பூக்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

2 thoughts on “என்னைப்பற்றி

  1. அய்யா, தாங்கள் கடந்து வந்த பாதை சற்று கரடுமுரடாகத்தான் இருக்கிறது. கிராமபுறத்தில் பிறந்து வளர்ந்து ஒளிர்வது என்பது சற்று கடினம்தான். தாங்கள் அதை சாதித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. தங்கள் பயணவழி மற்றவர்களுக்கு பாதையாக மாறட்டும்.

    • நீங்கள் குறிப்பிடுவது போல் நம் வழி மற்றவர்கள் பின்பற்றப்படும்படி அமைந்தால் அதைவிட வேறு மகிழ்ச்சி தேவையில்லை. உங்கள் வாழ்த்து மெய்படும். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *