செயல் திட்டம்

1)  கணக்கில் 8ஆம் வகுப்பு வரை அறிமுகமில்லாத இயல் கணவியலாகும். எனவே  9ஆம் வகுப்பில் நுழையும் மாணவர்களுக்கு. கணம் என்ற கருத்து முற்றிலும் புதியதாகும். நன்கு வரையறுக்கப்பட்ட பொருள்களின் தொகுப்பு கணம் என்பதை உணர்த்தி, கணச் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் செய்து பார்ப்பதன் மூலம் எளிதாக்கலாம்.

A ={a,b,c,d,e} , B = {a,c,e,i,o} எனில் A U B = {a,b,c,d,e,i,o} இந்த கணச் செயலை விளையாட்டு முறையில் படத்தில் காட்டியுள்ளபடி செய்து பார்ப்பதன் மூலம் கணங்களின் சேர்ப்புப் பண்பை மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள்.

மேலும் சில செய்முறைகளை வழங்கி மதிப்பிடலாம். மாணவர்களை எண்ணிக்கைக்கேற்ப சில குழுக்களாகப் பிரித்து கீழ்க்கண்ட செயல்பாட்டினை செய்திடக்கூறலாம். பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள சொல் விளையாட்டு கட்டங்களை கணச்செயல்பாடுகள் மூலம் நிரப்பசெய்து ஒவ்வொரு செயலிலும் கிடைக்கும் எழுத்துகளைக்கொண்டு அர்த்தமுள்ள சொற்களை உருவாக்கி படிக்கச் செய்து மதிப்பிடலாம்.அவ்வாறு உருவாக்கப்பட்ட சொற்றொடர் இது.YOUR WORK WITH SETS IS VERY SOUND AND YOU ARE NOW AN EXPERT. இது போல் ஆசிரியரின் கற்பனைக்கேற்ப செயல் திட்டங்களை வழங்கி மாணவர்களை மதிப்பிடலாம்.

 

9 ஆம் வகுப்பு, கணக்கு, கணவியல் பாடத்திற்கானசெயல்திட்டம்

.set2

set4

2) மன்னம்ப்பாடி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளின் எண்ணிக்கை

வகுப்பு மாணவர் மாணவி
6 10 17
7 12 18
8 14 18
9 20 27
10 16 16
——————————————————————————–
மொத்தம் 72 96
——————————————————————————–

7ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் உள்ளவிகிதம் 12:18 ஆகும் இதனை எளிய வடிவில் மாற்றினால் 2:3 என்ற விகிதம் கிடைக்கும் எனவே 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் உள்ள விகிதம் 2:3 ஆகும்.(2 x 6 = 12, 3 x 6 = 18 )

பள்ளியிலுள்ள மொத்த மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் உள்ள விகிதம் 72:96இதன் எளிய வடிவம் 3:4
(3 x 24 = 72, 4 x 24 = 96)

இது போல் உங்கள் பள்ளி மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை எழுதி செய்துபாருங்கள்.

set5

 

ஆறாம் வகுப்பு கணக்கு – அளவைகள் (கால அளவைகள் ) பாடத்திற்கான மாதிரி செயல் திட்டம்

1980 வரை 2012 வரை உள்ள ஆண்டுகளில் எவை லீப் ஆண்டுகள் என்க் கண்டரறியவும்.
லீப் ஆண்டுகளைக்கண்டறிய குறிப்பிட்ட ஆண்டை 4 ஆல் வகுத்தால் மீதியின்றி வகுபட்டால் அது லீப் ஆண்டு ஆகும்.
எ.டு.
1980/4 = ஈவு – 495 , மீதி – 0 – 1980 – லீப் ஆண்டு
1981/4 = ஈவு – 495 , மீதி – 1 – 1981 – லீப் ஆண்டு அல்ல
1982/4 = ஈவு – 495 , மீதி – 2 – 1982 – அல்ல
1983/4 = ஈவு – 495 , மீதி – 3 – 1983 – அல்ல
1984/4 = ஈவு – 496 , மீதி – 0 – 1984 – லீப் ஆண்டு
இது போல் 2012 வரை வுகுத்து ஈவு மீதியைக்கொண்டு கண்டறிக.

3)விருத்தாசலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்குச்செல்லும் தொடர்வண்டிகள் பற்றிய விவரங்கள்

வண்டிஎண் வண்டியின் பெயர் செல்லுமிடம் புறப்படும் நேரம் சேரும்நேரம் தூரம்

2634 கன்னியகுமரிவிரைவுவண்டி கன்னியாகுமரி 20.47 06.50 530 கி.மீ
1043 மதுரைவிரைவுவண்டி மதுரை 05.52 11.50 284 கி.மீ.
6351 நாகர்கோயில்விரைவுவண்டி நாகர்கோயில் 19.07 05.30 514 கி.மீ.
6713 ராமேஸ்வரம்விரைவுவண்டி ராமேஸ்வரம் 20.22 05.15 436 கி.மீ.
2693 முத்துநகர்விரைவுவண்டி தூத்துக்குடி 22.52 07.25 444 கி.மீ.
834 கடலூர்பயணிகள்வண்டி கடலூர் 04.30 05.40 58 கி.மீ.
837 சேலம்பயணிகள்வண்டி சேலம் 13.15 17.00 139 கி.மீ.
2662 பொதிகைவிரைவுவண்டி சென்னை 02.36 07.05 213 கி.மீ.ம்

கன்னியாகுமரி விரைவு வண்டி விருத்தாசலத்திலிருந்து கன்னியாகுமரி செல்வதற்கு எவ்வளவு நேரமாகிறதுஎன்பதை { (24.00-20.47)+06.50 = 03.13 + 06.50 = 10.03 } இவ்வாறு கணக்கிட வேண்டும்.
இதேப்போல் பயணிகள் வண்டியில் பயணம் செய்ய ஆகும் நேரத்தைக் கணக்கிட்டு இரண்டையும் ஒப்பிடுக

 

 

 

வர்க்கமூலச் சுருள் வரைவோம்

ஆம் வகுப்பு கணக்குப் பாடத்திற்கு ஆய்வகச்செயல்பாடுகள் இந்த ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. அதில் மேய்யெண் தொகுப்பு என்னும் 2 ஆவது இயலுக்கான ஆய்வகச்செயல்பாடாக வர்க்கமூலச் சுருள் வரைதல் என்னும் செயல்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை எவ்வாறு செய்யலாம் என்பதைப் படத்தில் காணலாம்.

வர்க்கமூலச் சுருளை முதன்முதலாக கிரேக்க நாட்டுக் கணித அறிஞர் தியோடரஸ் என்பவர் அமைத்துக் காட்டினார். அதனால் இது தியோடரஸ் சுருள் என்றும், பித்தகார்ஸ் தேற்றத்தைப்பயன்படுத்தி அமைப்பதால் பித்தகாரஸ் சுருள் என்றும் அழைக்கப்படுகிறது.

முதலில் A 4 அளவுள்ள தாளை நீள வாக்கில் இரண்டாக மடிக்க வேண்டும் அந்த மடிப்பின்மீது தாளின் வலப்புறத்தில் வலமிருந்து சுமார் 4 செ.மீ. இடைவெளி விட்டு குறிப்பிட்ட அளவில் ( 4 செ.மீ நல்லது ) இருசமபக்க செங்கோண முக்கோணம் அமைக்கவும் செங்கோணத்தை உள்ளடக்கிய இரண்டு பக்கங்களை ஒவ்வொரு அலகாகக் கொள்ளவேண்டும். பித்தகாரஸ் தேற்றத்தின் படி செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற இரண்டு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என்பதால் இந்த முக்கோணத்தின் கர்ணம் ரூட் 2 எனக்கொள்க. இப்போது முதல் முக்கோணத்தின் கர்ணத்தை அடிப்பக்கமாகக் கொண்டு மற்றொரு செங்கோண முக்கோணத்தை அமைத்தால் அந்த முக்கோணத்தின் கர்ணம் ரூட் 3 கிடைக்கும் இதேப்போல் தொடர்ந்து ரூட் 10 வரும் வரை முக்கோணங்களை அமைத்தால் வர்க்கமூலச்சுருள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு இதனைக் கற்றுக்கொடுத்து வரையச் செய்து வண்ணம் தீட்டி அழகுபடுத்தலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு பல்வகை கணிதச்செயல்பாடுகள் எளிதாகும்.செங்கோணத்தை காகித மடிப்பு முறையிலும் அமைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *