காகித மடிப்பைப் பயன்படுத்தி முக்கோணத்தின் சுற்றுவட்ட மையம் காண்போம்

centre line centre line1
மாணவர்களை குறிப்பிட்ட அளவில் ஒரு முக்கோணம் வரையச்சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக AB = 10 செ.மீ., கோணம் A = 60 ˚, கோணம் B = 70 ˚ அளவுள்ள முக்கோணம் வரையலாம். இந்த முக்கோணத்தின் ஏதேனும் இரண்டு பக்கங்களுக்கு மையக்குத்துக்கோடுகளை காகித மடிப்பின் மூலம் ஏற்படுத்த கற்றுத்தரவேண்டும். அந்த இரு மடிப்புகளும் சந்திக்கும் புள்ளியே அந்த முக்கோணத்தின் சுற்று வட்ட மையமாகும். எனவே அந்த மையப் புள்ளியிலிருந்து முக்கோணத்தின் மூன்று முனைகளையும் தொடும்படியாக கவராயத்தால் வட்டும் வரைந்து மடித்த மடிப்பு சரிதானா என்று சோதிக்கலாம். மூன்று முனைகளையும் சரியாகத்தொடவில்லையேனில் மீண்டும் சரியாக மையத்தில் மடிக்கக் கற்றுத்தந்து மீண்டும் வட்டம் வரைந்து சரிபார்க்கலாம்.