கூட்டலில் விளையாடலாமா ?

addition

குழந்தைகளை வியப்பிலாழ்த்த இதோ ஒரு கணக்கு
1.குழந்தை : ______________

3.குழந்தை:_______________

4.ஆசிரியர்:_______________

5.குழந்தை:_______________

6.ஆசிரியர்:_______________

 

2.ஆசிரியர்:______________

முதலில் மேற்கண்டவாறு அமைத்துக்கொள்ளவும். ஒரு குழந்தையை அழைத்து ஒரு நான்கு இலக்க எண்ணை (1) ஆம் கோட்டில் எழுதச்சொல்லுங்கள் குழந்தை 4375 என்று எழுதுவதாக வைத்துக்கொள்வோம் ஆசிரியர் விடையை 24373 என்று எழுதவேண்டும். பிறகு (3) என்ற கோட்டில் குழந்தையை மீண்டும் ஒரு நான்கு இலக்க எண்ணை எழுதச்சொல்க 7615 என்று எழுதினால் (4) ஆம் கோட்டில் நாம் 2384 என்று எழுதவேண்டும். (5) இல் குழந்தை 6372 என்று எழுதினால் (6) இல் ஆசிரியர் 3627 என்று எழுதவேண்டும் இப்போது கூட்டிப்பார்த்தால் முன்பு எழுதிய விடை சரியாக இருக்கும்.

1.குழந்தை : 4375

3.குழந்தை: 7615

4.ஆசிரியர்: 2384

5.குழந்தை: 6372

6.ஆசிரியர்: 3627

—————————————————

2.ஆசிரியர் : 24373

————————————————-

முதலில் குழந்தை எழுதிய எண்ணிலிருந்து 2 ஐக் கழிக்கவும் (4375 – 2 = 4373 ) இப்போது கிடத்த எண்ணின் முன்னால் கழித்த 2 ஐச் சேர்க்கவும் ( 24373 ) இதுதான் நாம் கூட்டப்போகும் எண்ணின் விடை இப்போது 3 ஆம் கோட்டில் குழந்தை எழுதிய எண் 7615 இதிலுள்ள ஒவ்வொரு இலக்கத்தையும் 9 லிருந்து கழித்து ஆசிரியர் (4) இல் எழுத வேண்டும் ( 9 -7 = 2, 9 – 6 = 3, 9 – 1 = 8, 9 – 5 = 4. சுருக்கமாகச்சொன்னால் 9999- 7615 = 2384 )
இப்படி குழந்தை(5) இல் எழுதும் எண்ணை 9999 லிருந்து கழித்து (6) இல் ஆசிரியர் எழுத வேண்டும் இதை குழந்தை கண்டுபிடிக்காத வண்ணம் கிடுகிடுவென்று எழுதினால்தான் சுவாரசியமாக இருக்கும். இதை குழந்தைகளுக்குள் விளையாடச் சொல்லி கூட்டல் செயலை எளிதாக்கலாம். மகிழ்ச்சியோடு செய்வார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *