இயற்கணிதக் கோவையின் மதிப்புகள்

 

ஒரு கோவையில் உள்ள மாறிகளின் மதிப்புகள் மாறும்பொழுது கோவையின்

மதிப்பும் மாறும் என்பதை நாம் அறிவோம். உதாரணமாக x + 5 என்ற கோவையை எடுத்துக்கொள்வோம். x  இன் மதிப்புகள் மாறும்பொழுது கோவையின் மதிப்புகளும் மாறுவதைக் கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.

X இன் மதிப்பு

கோவை x+5 இன் மதிப்பு

1

1+5=6

2

2+5=7

3

3+5=8

-4

-4+5=1

 

இதுபோல் X  இன் மதிப்புகளை மாணவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியபிறகு கோவையின் மதிப்புகளில் ஏற்படும் மாற்றத்தை அட்டவணைப்படுத்தக் கூறி சரியாக மதிப்புகளை எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பீடு அளிக்கலாம்.

 

8 ஆம் வகுப்பு , பருவம்2, இயற்கணிதம், கோவையின் மதிப்புகள்