வட்ட விளக்கப்படம் வரைதல்

piechart2 Piechart6

வட்ட விளக்கப்படம் வரைவதற்கு இச்செயல்பாடு மாணவர்களுக்குப் பயன்படும்.

கீழ்க்கண்ட விவரங்களுக்கு வட்ட விளக்கப்படம் வரைவதைப் படத்தில் காட்டியுள்ளபடி செய்யலாம்.

பள்ளி இறுதிப் பொதுத்தேர்வு முடிவுகள்

 

தேர்வுமுடிவு முதல்வகுப்பில்தேர்ச்சிபெற்றோர் இரண்டாம்வகுப்பில்தேர்ச்சிபெற்றோர் மூன்றாம்வகுப்பில்தேர்ச்சிபெற்றோர் தேர்ச்சிபெறாதோர்
மாணவர்சதவீதம் 25 35 30 10

அட்டவணையிலுள்ள மாணவர் சதவீதங்களைக்கூட்ட 100 கிடைக்கும். மேற்கண்ட விவரங்களை வட்ட விளக்கப் படமாக வரையவேண்டுமெனில் அட்டவணையிலுள்ள ஒவ்வொரு சதவீதத்திற்கும் வட்டத்தினுள் எவ்வளவு இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதைக் கண்டறியவேண்டும். அதற்கான முறை. முதலிலுள்ள 25 சதவீதத்திற்கு எவ்வளவு இடம் என்பதை 25/100X360 = 90 என்ற வாய்ப்பாட்டைப் பயன்படுத்தவேண்டும்.இதில் 360 டிகிரி என்பது வட்டத்தின் மையத்தில் ஏற்படும் கோணங்களின் கூடுதல்.இது போல் ஒவ்வொரு சதவீதத்திற்கான கோண அளவைக் கண்டறிந்து கரும்பலகையில் அட்டவணைப் படுத்த வேண்டும்.

தேவையான அளவு சணலை எடுத்து அதன் ஒரு நுனியில் ஒரு சாக்பீசைக் கட்டிக்கொண்டு நம் வசதிக்கேற்ப வட்டத்தைத் தரையில் வரந்துகொள்க. ஒரு ஆரத்தை வரைந்த பிறகு பாகைமானியின் உதவியோடு தேவைப்படும் மற்ற நான்கு ஆரங்களையும் உரிய கோண அளவில் வரைக. கிடைக்கும் வட்டக்கோண பகுதிகளை வெவேறு வண்ணங்களால் நிரப்பிட வேண்டும். இவற்றை மாணவர்கள் குழுவாகச்செய்வதால் ஒவ்வொரு செயலையும் நன்கு நினைவில் வைத்திருப்பார்கள். இது போன்ற மற்ற கணக்குகளுக்கு உரிய வட்ட விளக்கப்படங்களை மாணவர்களைத் தனித்தனியே குறிப்பேட்டில்  வரந்து வரும்படிக் கூறலாம்  .

எட்டாம்வகுப்பு

கணக்கு

விவரங்களைக் கையாளுதல் பாடத்திற்கான செயல்பாடு