பூவாத்தலையா போடலாம் நிகழ்தகவு கற்கலாம்

 

 

வகுப்பிலுள்ள மாணவர்களை எண்ணிக்கைக்கேற்ப தேவைப்படும் குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும்.குழுவுக்கு ஒரு நாணயத்தைக்கொடுத்து 10 முறை சுண்டச்சொல்லி அதில் எத்தனை முறை தலை கிடைக்கிறது எத்தனை முறை பூ கிடைக்கிறது என்பதை கீழ் உள்ள அட்டவணையில் குறிக்கச்சொல்லவும்.

(உதாரணம்)

விளைவு நேர்கோட்டுக்குறிகள் 10 முறை சுண்டுதலில் விழுந்த தலைகள்/ பூக்களின் எண்ணிக்கை
தலை ⃓⃓⃓⃓⃓⃓

 

6
பூ ⃓⃓⃓⃓

 

4

இது போல் ஒரு நாணயத்தை 20,30,40,50 முறை சுண்டச்செய்து மேற்கூறிய முறையில் அட்டவணைப் படுத்தவேண்டும். அவற்றை க்கீழ்க்கண்ட முறையில் பின்னங்களாக்க வேண்டும்

6

தலை கிடைத்த சுண்டுதலின் எண்ணிக்கை

_____________________________________________

10

சுண்டுதலின் மொத்த எண்ணிக்கை

 

ஒரு நாணயத்தை 10 முறை சுண்டும்போது தலை கிடைத்ததற்கான நிகழ்தகவு 6/10

எனக் குறிப்பிட வேண்டும். நிகழ்தகவு என்பதுசெயல்கள் நிகழக்கூடிய வாய்ப்புகளை வைத்து முடிவெடுக்க உதவுகிறது என்பதை இச்செயல்பாட்டின்மூலம் மாணவர்களை உணரச்செய்யலாம்.

 

Prob1 Prob3